• Increase font size
  • Default font size
  • Decrease font size2014-10-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொழும்பு தாமரைக் கோபுரம் சார்ந்ததாக நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுர கடை மற்றும் களியாட்ட கட்டடத்தொகுதி
2 கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப் படுத்துவதை இலகுபடுத்தும் பொருட்டு நல்லிணக்கத்திற்கான விசேட பணியகமொன்றைத் தாபித்தல்
3 அநுராதபுர நகர மத்தியிலுள்ள அரசாங்கக் காணித் துண்டொன்றை உடைமையாக்கிக் கொள்ளல்
4 நாவுல நகர அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கு காணிகளை உடைமையாக்கிக் கொள்ளல்
5 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு பீடமொன்றைத் தாபித்தல்
6 நிதி ஒழுங்குவிதி - 2015
7 உள்நாட்டு வங்கியிடமிருந்து பெற்றுக் கொண்ட நிதியத்தின் மூலம் முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - அவிசாவளை மற்றும் கொஸ்கம ஒருங்கிணைந்த நீர்வழங்கல் திட்டத்தையும் கலகெதர மற்றும் மாவத்தகம நீர்வழங்கல் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துதல்
8 ஜனசெவன தேசிய வீடமைப்பு மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிருமாணிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள ஹோமாகம மவுன்ட் கிலிபர்ட் தோட்ட வீடமைப்பு கருத்திட்டமும் யக்கல வெரெலவத்த வீடமைப்புக் கருத்திட்டமும் (இலங்கை உருக்கு கூட்டுத்தாபனத்தின் காணி)
9 கொரியக் குடியரசின் கல்வி அமைச்சின் நன்கொடையாகக் கிடைக்கின்ற முற்றுமுழுதான நவீன தகவல் தொடர்பாடல் தொழினுட்பக் கூடத்துடனான வகுப்பறையொன்றைத் தாபித்தல்
10 இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பிரதான அலுவலகக் கட்டடத்தொகுதிக்காக இரண்டு காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
11 2016 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்த சருவதேச சீனிக் கைத்தொழிலாளர்களின் அமைப்பின் 49 ஆவது கூட்டத்தொடரை கொழும்பில் நடாத்துதல்
12 அரசாங்க ஊழியர்களுக்காக பொரளை பிரதேசத்தில் வீடமைப்புக் கருத்திட்ட மொன்றை வடிவமைத்து நிருமாணிப்பதற்கான கேள்வி
13 சருவதேச அபிவிருத்தி சங்கத்தினால் நிதியளிக்கப்படுகின்ற காலநிலை தாக்கத்தை குறைக்கும் கருத்திட்டம் (CRIP) தெரிவு செய்யப்பட்ட வீதிகளில் மண்சரிவைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பரிசோதனைகளை மேற்கொள்ளுதலும் திட்டங்களை வகுத்தலும் நிருமாணிப்பு மேற்பார்வைக்காக உசாத்துணை சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை நேரடி ஒப்பந்த வழங்கல் நடைமுறைத் திட்டத்தின் ஊடாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்குதல்
14 சருவதேச அபிவிருத்திக்கான OPEC நிதியத்தினால் நிதியளிக்கப்படுகின்ற கொழும்பு தேசிய நெடுஞ்சாலைக் கருத்திட்டம் - ஶ்ரீ ஜயவர்த்தனபுர மருத்துவ மனைக்கான நுழைவாயில், தெமட்டகொட - வெல்லம்பிட்டி வீதி, கொலன்னாவ - யக்பெத்த வீதி, வெலிக்கடை - கொஹிலவத்த வீதி, மத்திய வீதி போன்ற வீதிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
15 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படுகின்ற தெற்கு வீதி தொடர்பாடல் கருத்திட்டம் - 05 ஆண்டுகால செயலாற்றுகை பராமரிப்பு உள்ளடங்கலாக மொரட்டுவை - பிலியந்தலை பாதையின் 2.62 கி.மீ.தொடக்கம் 5.12 கி.மீ வரையிலான பகுதியையும் இரத்மலானை - மிரிஹான வீதியின் 5.70 கி.மீ தொடக்கம் 7.84 கி.மீ வரையிலான பகுதியையும் புனரமைப்புச் செய்தல் / மேம்படுத்துதல்
16 பேலியகொடயிலிருந்து கொழும்பு கோட்டை வரை உயர்த்தி நிருமாணிக்கப்படுகின்ற நெடுஞ்சாலையை திட்டமிட்டு நிருமாணித்தல் - அவுஸ்ரேலியாவின் HASS கூட்டு செயற்திட்டத்துடன் சேர்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் அவர்களிடமிருந்து விரிவான பிரேரிப்புகளைப் பெற்றுக் கொள்ளல்
17 பொலன்னறுவை மாவட்டத்தின் பிரதேச மட்டத்தில் அமைந்துள்ள மருந்துவமனைகளை அபிவிருத்தி செய்தல்
18 முல்லேரியா தள வைத்தியசாலை மனையிடத்தில் இலங்கை தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் சார்பில் உத்தியோகபூர்வ இல்லங்களை நிருமாணித்தல்
19 மில்கோ தனியார் கம்பனியின் படல்கமவில் உள்ள கொழும்பு பால் தொழிற்சாலையை வேறோர் இடத்திற்குக் கொண்டு செல்லல்
20 திறைசேரி முறிகளின் மீது உள்நாட்டு வங்கிகளிலிருந்து பெறப்படும் நிதியத்தைப் பயன்படுத்தி முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - ஊருகஸ்மன்சந்தி, கோனாபீனுவல, திக்கும்புர மற்றும் வெலிஓயா நீர்வழங்கல் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
21 சிலாபம் நகரத்திற்கும் புத்தளம் நகரத்திற்குமான கழிவு நீரகற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மஹரகம பொரலஸ்கமுவ பிரதேசங்களுக்கான கழிவு நீரகற்றல் முறைமையொன்றையும் தாபித்தல்
22 ஆசிய அபிவிருத்தி வங்கியின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப் படுகின்ற பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - I வது கருத்திட்டம் - கொழும்பு நகரத்தின் வடக்கு பிரதேசத்தின் வருமானம் பெறப்படாத நீரை குறைத்துக் கொள்ளும் முறைமையை புனரமைப்பதற்கான கருத்திட்டம்
23 உள்நாட்டு வங்கியின் மூலம் வழங்கப்படுகின்ற நிதியத்தின் ஊடாக மெல்சிறிபுர நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
24 ஜோன் த சில்வா ஞாபகார்த்த தியேட்டர் மண்டபத்தின் நிருமாணிப்பு
25 சப்புரகமுவ மாகாணத்தில் விளையாட்டுத்துறை கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
26 உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அரசாங்க மதியுரை நிறுவனமொன்றைத் தாபித்தல்
27 அம்பாறை நீர் வழங்கல் திட்டத்தின் III ஆம் கட்டத்திற்கு நிதியளித்தல்
28 சர்வதேச உறவுகள் நிலையமொன்றை கிழக்கு மாகாணத்தில் தாபிப்பதற்காக கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
29 வடக்கு அதிவேகப் பாதையின் என்டேரமுல்ல தொடக்கம் கலேவெல வரையிலான பகுதியையும் இணைப்பு அதிவேக வீதியின் பொத்துஹரயிலிருந்து கலகெதர வரையிலான பகுதியையும் நிருமாணித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.