• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜனசெவன தேசிய வீடமைப்பு மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிருமாணிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள ஹோமாகம மவுன்ட் கிலிபர்ட் தோட்ட வீடமைப்பு கருத்திட்டமும் யக்கல வெரெலவத்த வீடமைப்புக் கருத்திட்டமும் (இலங்கை உருக்கு கூட்டுத்தாபனத்தின் காணி)

- 924 வீட்டு அலகுகளைக் கொண்ட ஹோமாகம மவுன்ட் கிலிபர்ட் தோட்ட வீடமைப்பு கருத்திட்டமும் 591 வீட்டு அலகுககளைக் கொண்ட யக்கல வெரெலவத்த வீடமைப்புக் கருத்திட்டமும் முதலீடு, வடிவமைப்பு, நிருமாணிப்பு ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் முறையே 2,659.2 மில்லியன் ரூபாவையும் 1,775.2 மில்லியன் ரூபாவையும் கொண்ட ஒப்பந்த தொகைக்கு வழங்கும் பொருட்டும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் இந்தக் கருத்திட்டங்களின் சகல விற்பனை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்குமாக நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் மாண்புமிகு விமல் வீரவங்ச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.