• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மில்கோ தனியார் கம்பனியின் படல்கமவில் உள்ள கொழும்பு பால் தொழிற்சாலையை வேறோர் இடத்திற்குக் கொண்டு செல்லல்

- கொழும்பு நகரத்தினுள்ளும் அதற்கண்மித்த பிரதேசங்களிலும் நிலைமைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப் பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் நாராஹேன்பிட்டவிலுள்ள மில்கோ தொழிற்சாலையை படல்கமவில் இனங்காணப்பட்டுள்ள மனையிடத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் அதற்குரிய பணிகளை மேற்கொள்வதற்குமாக கால்நடைவளர்ப்பு, கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஆறுமுகன் தொண்டமான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.