• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொரியக் குடியரசின் கல்வி அமைச்சின் நன்கொடையாகக் கிடைக்கின்ற முற்றுமுழுதான நவீன தகவல் தொடர்பாடல் தொழினுட்பக் கூடத்துடனான வகுப்பறையொன்றைத் தாபித்தல்

- அதிமேதகைய சனாதிபதி அவர்களும் கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களும் தென்கொரியாவுக்கு மேற்கொண்ட சுற்றுலாவின் பின்னர், கொரிய குடியரசின் கல்வி அமைச்சர் கொடியக் குடியரசின் நன்கொடையாக முற்றுமுழுதான நவீன தகவல் தொடர்பாடல் தொழினுட்பக் கூடத்துடனான வகுப்பறையொன்றைத் ஹோமாகம, பிட்டிபன, மஹிந்த ராஜபக்‌ஷ கல்லூரிக்கு வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய பணிகளை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.