• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேலியகொடயிலிருந்து கொழும்பு கோட்டை வரை உயர்த்தி நிருமாணிக்கப்படுகின்ற நெடுஞ்சாலையை திட்டமிட்டு நிருமாணித்தல் - அவுஸ்ரேலியாவின் HASS கூட்டு செயற்திட்டத்துடன் சேர்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் அவர்களிடமிருந்து விரிவான பிரேரிப்புகளைப் பெற்றுக் கொள்ளல்

- களனி கங்கைக்கு குறுக்காக புதிய பாலமொன்றை நிருமாணப்பதன் மூலமும் பேலியகொடையிலிருந்து கொழும்பு கோட்டை வரை நெடுஞ்சாலையொன்றை மேல் உயர்த்தி நிருமாணிப்பதன் மூலம் பேலியகொட மற்றும் கொழும்பு நகரத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கருதுகின்றது. புதிய பாலத்தையும் அதன் நுழைவாயிலையும் நிருமாணிப்பதற்கான கருத்திட்டம் புறம்பாக தயாரிக்கப் பட்டுள்ளதோடு, யப்பான் சருவதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தினால் அதற்கான நிதி வழங்கப்படுகின்றது. ஏற்கனவே மேல் உயர்த்தி நிருமாணிக்கப்படும் நெடுஞ்சாலை தொடர்பிலான சாத்தியத் தகவாய்வும் ஆரம்ப திட்டங்களும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. பேலியகொட மற்றும் கொழும்பு - கோட்டை ஆகியவற்றை இணைப்பதற்கு மேல் உயர்த்தி நிருமாணிக்கப்படும் நெடுஞ்சாலையும் நிருமாணிப்பு சம்பந்தமான ஆரம்ப வேலைகளை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.