• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாறை நீர் வழங்கல் திட்டத்தின் III ஆம் கட்டத்திற்கு நிதியளித்தல்

- அம்பாறை நீர் வழங்கல் திட்டத்தின் III ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அவுஸ்ரேலியா நிறுவனமொன்றிடமிருந்து 105,109,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் தொகையொன்றை பெறுவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கருத்திட்டத்தின் கண்டறியப்பட்ட மேலதிகப் பணிகள் காரணமாக இந்த கடன்தொகையை 7,538,854 ஐக்கிய அமெரிக்க டொலர்களினால் அதிகரிப்பதற்கும் அதற்குரிய பணிகளை மேற்கொள்தவற்குமாக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.