• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு அதிவேகப் பாதையின் என்டேரமுல்ல தொடக்கம் கலேவெல வரையிலான பகுதியையும் இணைப்பு அதிவேக வீதியின் பொத்துஹரயிலிருந்து கலகெதர வரையிலான பகுதியையும் நிருமாணித்தல்

- இணைப்பு அதிவேக வீதியின் பொத்துஹரயிலிருந்து கலகெதர வரையிலான பகுதியையும் நிருமாணிப்பதற்கு அரசாங்கத்தினால் உயர் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. வடக்கு அதிவேகப் பாதையின் மேற்குறிப்பிட்ட பகுதி மூலம் கம்பஹா, வேயங்கொட, குருநாகல், ரிதீகம, மெல்சிறிபுர, கலேவெல போன்ற பிரதான வர்த்தக நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளதோடு, இணைக்கும் அதிவேக வீதியின் மேற்போந்த பகுதியின் மூலம் ரம்புக்கனை, கலகெதர போன்ற வர்த்தக நகரங்கள் இணைக்கப்படவுள்ளன. வடக்கு அதிவேக வீதிப்பகுதியில் என்டேரமுல்ல (இடமாற்ற பிரதேசம்), கம்பஹா, வேயங்கொட, மீரிகம, நாக்கலகமுவ, தம்பொக்க, மீரிகம, குருநாகல், ரிதீகம, மெல்சிறிபுர, கலேவெல, பொத்துஹர (இடமாற்ற பிரதேசம்) போன்ற பிரதேசங்களில் இடமாற்ற நிலையங்கள் நிருமாணிக்கப்படவுள்ளன. இணைப்பு அதிவேக வீதியின் இடமாற்ற பிரதேசங்கள் ரம்புக்கனை மற்றும் கலகெதர பிரதேசங்களில் நிருமாணிக்கப்படவுள்ளது. இந்த இடமாற்ற பிரதேசங்களின் மூலம் அதிவேக பாதைகளுக்கிடையில் மாத்திரம் இணைப்பு ஏற்படுத்தப்படும். இதற்கான சாத்தியத் தகவாய்வு ஆரம்ப திட்டங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, மேற்போந்த பகுதிகளுக்காக பிரேரிக்கப்பட்டுள்ள அதிவேக வீதி பிரதேசங்களும் கண்டறியப்பட்டுள்ளன. சுற்றாடல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்காகவும் காணி கொள்ளல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிருமாணிப்பு பணிகளை நடைமுறைப்படுத்துவதற்காக அதிவேக வீதியின் மேற்போந்த பகுதிகளை பின்வருமாறு 8 தனிவேறான ஒப்பந்த பொதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த பொதி இலக்கம் வீதிப் பகுதியின் பெயர் நீளம் (கி.மீ)
பொதி இலக்கம் 01 என்டேரமுல்ல - வேயாங்கொட 28.0
பொதி இலக்கம் 02 வேயாங்கொட - மீரிகம 16.0
பொதி இலக்கம் 03 மீரிகம - நாக்கலகமுவ 18.0
பொதி இலக்கம் 04 நாக்கலகமுவ - அலகொலதெனிய 20.1
பொதி இலக்கம் 05 அலகொலதெனிய - மெத்தேகெட்டிய 16.9
பொதி இலக்கம் 06 மெத்தேகெட்டிய - கலெவெல 19.0
பொதி இலக்கம் 07 பொத்துஹர - றம்புக்கனை 17.5
பொதி இலக்கம் 08 றம்புக்கனை - கலகெதர 18.0



இதற்குரிய பணிகளை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.