• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு வங்கியிடமிருந்து பெற்றுக் கொண்ட நிதியத்தின் மூலம் முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - அவிசாவளை மற்றும் கொஸ்கம ஒருங்கிணைந்த நீர்வழங்கல் திட்டத்தையும் கலகெதர மற்றும் மாவத்தகம நீர்வழங்கல் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துதல்

- தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் மேற்போந்த நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக உள்நாட்டு வங்கிகளுடன் கடன் உடன்படிக்கைகளையும் அதுசார்ந்த பணிகளையும் மேற்கொள்வதற்காகவும் 2016 ஆம் ஆண்டில் கருத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்காவும் நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.