எம்மைப் பற்றி |
அமைச்சரவைக்குச் செயலாளர் ஒருவர் இருத்தல் வேண்டுமென்பதுடன் அவர் சனாதிபதியினால் நியமிக்கப்படுதலும் வேண்டும்.செயலாளர் சனாதிபதியின் பணிப்புக்கமைய அமைச்சரவை அலுவலகத்திற்குப் பொறுப்பாயிருத்தல் வேண்டும் என்பதுடன், சனாதிபதியினால் அல்லது அமைச்சரவையினால் அவருக்கு குறித்தொதுக்கப் படக்கூடியவாறான அத்தகைய வேறு பணிகளையும் கடமைகளையும் அவர் புரிதலும் நிறைவேற்றுதலும் வேண்டும்.
[உறுப்புரை 51(2), இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் நியதிகளின்]
|
தொலைநோக்கு |
ஆட்சித்துறைக்கு ஒத்தாசை வழங்கும் நம்பகரமான அரசாங்க நிறுவனமாதல். |
|
செயற்பணி |
அரசியலமைப்பின் 43 (1) ஆம் துணை உறுப்புரையின் நியதிகளின் பிரகாரம் அமைச்சரவைக்கு கையளிக்கப்பட்டுள்ள குடியரசின் நல்லாட்சிக்கான நெறிப்படுத்தலுக்கு இசைவாக தீர்மானத்தை எடுக்கும் செயற்பாட்டுக்குத் தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வினைத்திறனுடன் நல்குதல் |
|
குறிக்கோள் |
அமைச்சரவையினால் தீர்மானம் எடுக்கும் போதும் அமைச்சரவை உப குழுக்களினால் சிபாரிசுகளைச் சமர்ப்பிக்கும் போதும் இந்தப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல். |
|
செயற்பாடுகள் | |
அமைச்சரவை விஞ்ஞாபனங்களை தயாரித்தல் மீது அறிவுறுத்துரைகளை அமைச்சுகளுக்கு வழங்குதலும் இது தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் சிரேட்ட உத்தியோகத்தர்களுக்கும் வழிகாட்டுதலும்.
|
|
கொள்கை வகுத்தல் மற்றும் குடியரசு அரசாங்கத்தின் நல்லாட்சி சம்பந்தமாக அரசியலமைப்பின் மூலம் அமைச்சரவைக்கு கையளிக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றும் போது அமைச்சரவைக்கும் அமைச்சரவை உபகுழுக்களுக்கும் இயைபுள்ள அமைச்சரவை விஞ்ஞாபனம் தொடர்பில் தெளிவானதும் இயைபுள்ள சகல விடயங்கள் தொடர்பாகவும் முறையான புரிந்துணர்வுடன் தீர்மானங்களை எடுப்பதை இலகுவாக்குவதன் பொருட்டு இந்த விஞ்ஞாபனங்கள் சம்பந்தப்பட்ட சட்ட மற்றும் கொள்கைப் பின்னணிகள் ஆழமாக ஆராயப்பட்டு அமைச்சரவைக்கும் அமைச்சரவை உப குழுக்களுக்கும் விடயங்களை முன்வைத்தல்.
|
|
இயைபுள்ள அமைச்சர்களின் அவதானிப்புரைகளைப் பெறுவதன் பொருட்டு அமைச்சரவை விஞ்ஞாபனங்களை தொடர்புபடுத்துதல்.
|
|
அமைச்சரவை விஞ்ஞாபனங்களை கவனமாகப் பரிசீலனை செய்ததன் பின்னர் அமைச்சரவை கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலில் அவற்றை நிரற்படுத்துதல்.
|
|
அமைச்சரவை விஞ்ஞாபனங்களை இயைபுள்ள அவதானிப்புரைகளுடன் பரிசீலனை செய்வதன் பொருட்டு அமைச்சரவை உபகுழுக்களுக்கும் அமைச்சரவைக்கும் சமர்ப்பித்தல்.
|
|
அமைச்சரவை உபகுழுக்களினதும் அமைச்சரவையினதும் தீர்மானங்கள் உள்ளடக்கப்பட்ட நிகழ்ச்சிக் குறிப்புகளை மும்மொழிகளிலும் தயாரித்தல் மற்றும் குறித்த அறிக்கைகளை மாண்புமிகு அமைச்சர்களுக்கும் இயைபுள்ள அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் பிற இயைபுள்ள அதிகாரிகளுக்கும் தொடர்புபடுத்துதல்.
|
|
அமைச்சரவை உபகுழுக்களினதும் அமைச்சரவையினதும் கூட்டங்களுக்கு தேவையான சகல சேவைகளையும் வழங்குதல்.
|
|
அமைச்சரவையினால் எடுக்கப்படும் தீர்மானங்களை இயைபுள்ள அமைச்சுகளுக்கு அறிவித்தல்.
|
|
முக்கியமான அமைச்சரவைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல் சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகளை எடுத்தல்
|
|
அதிமேதகைய சனாதிபதியினால் அல்லது அமைச்சரவையினால் விதித்துரைக்கப்படும் பிற ஏதேனும் பணிகளை நிறைவேற்றுதல்.
|