2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள காணியினை பயன்படுத்தி சிறிய தொழில்முயற்சியாளர்களுக்கு தொழிற்பேட்டை யொன்றைத் தாபித்தல் - தற்போது உற்பத்தி பணிகளுக்காக பயன்படுத்தப்படாத காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள காணியிலிருந்து 330 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியில் சுற்றாடல் நட்புறவுமிக்க கைத்தொழில் பேட்டையொன்றைத் தாபிப்பதற்கும் அதன் முதலாம் கட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டில் 100 ஏக்கர்களில் அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்காக பொருத்தமான முதலீட்டாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |