2026-08-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழுள்ள தாதியர் கல்லூரிகளுக்கு தாதிப் போதனாசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்தல் - சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் ஆரம்பத் தாதியர் படிப்பிற்கு பின்னரான கல்லூரி உட்பட 17 தாதியர் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2026-03-31 ஆம் திகதியன்றில் தரம் I / அதியுயர் தர தாதி உத்தியோகத்தர் (கல்வி) பதவிகளில் 142 வெற்றிடங்கள் நிலவுகின்றதோடு, 24 உத்தியோகத்தர்கள் 2025-12-31 ஆம் திகதியன்றில் விசேட தர தாதி உத்தியோகத்தர் (கல்வி) பதவிகளில் நிலவும் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு விசேட தரத்திற்கு தரம் உயர்த்தப்பட உள்ளமையினால், மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கை 166 ஆகவுள்ளது. அவ்வாறே, விசேட தரத்தைச் சேர்ந்த தாதி உத்தியோகத்தர் (கல்வி) பதவியிலும் 24 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தற்போது தாதியர் கல்லூரிகளை தாதியர் பீடங்களாக மாற்றி, தாதியர் டிப்ளோமா கற்கைநெறியிலிருந்து தாதியர் பட்டப்படிப்பு வரை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதிலும், தரம் I / அதியுயர் தர தாதி உத்தியோகத்தர் (கல்வி) பதவிக்கு நியமிக்கும் பொருட்டு உரிய பயிற்சிகளுக்காக இதுவரை ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை. அதற்கிணங்க, தற்போது காணப்படும் வெற்றிடங்களை முறையான விதத்தில் நிரப்பும் வரை அரச தாதியர் கல்லூரிகளில் கடமையாற்றி ஓய்வுபெற்ற தாதிய போதனாசிரியர்கள் மற்றும் முப்படையினருக்குமுரிய தாதியர் கல்லூரிகளில் கடமையாற்றி ஓய்வுபெற்றுள்ள அல்லது சட்டப்பூர்வமாக சேவையிலிருந்து விலகியுள்ள தாதியர் போதனாசிரியர்களை தரம் I / அதியுயர் தர தாதி உத்தியோகத்தர் (கல்வி) பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யும் பொருட்டு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |










