• Increase font size
  • Default font size
  • Decrease font size

2025-12-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கையில் மின்னணு விலைப் பட்டியல் (E-Invoicing) முறையை அமுல்படுத்துதல்

- இலங்கையில் தற்போது நிகழ்கால (real-time) மின்னணு விலைப்பட்டியல் முறைமை நடைமுறையில் இல்லை என்றாலும் வரி முறைமைகளை நவீனமயப்படுத்துதல், வரி ஏய்ப்பைக் குறைத்தல் மற்றும் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கு பெரும்பாலான நாடுகளினால் மின்னணு விலைப்பட்டியல்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, தொடர்புடைய விடயங்கள் சம்பந்தமான சர்வதேச அபிவிருத்திகளையும் கருத்திற் கொண்டு, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வரி சேகரிப்புக்காக அமுல்படுத்தப்படும் வருமான நிர்வாக முகாமைத்துவத் தகவல் முறைமைக்கு இணங்கக்கூடிய வகையில் மின்னணு விலைப்பட்டியல் கட்டமைப்பொன்றை பின்பற்றுவதற்கான மதிப்பீடு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் மின்னணு விலைப்பட்டியல் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக பாதுகாப்பான Web Application Programming Interface வசதியினை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, பெறுமதி சேர்க்கப்பட்ட வரியின் பொருட்டு பதிவு செய்யும் நபர்களுக்கு Web API வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இயலுமாகும் வகையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமான நிர்வாக முகாமைத்துவத் தகவல் முறைமையை மேம்படுத்துவதற்காக சிங்கப்பூரின் NCS Solutions Pvt. Limited நிறுவனத்திடமிருந்து தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.