• Increase font size
  • Default font size
  • Decrease font size

2025-11-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
முதலீட்டு பாதுகாப்புக்கு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்

- தொழில்முயற்சிகள் மற்றும் சொத்துகள் உட்பட தனியார் சொத்துக்களை தன்னிச்சையாக தேசியமயப்படுத்துவதை தடை செய்தல், பிணக்குகளைத் தீர்க்கும் பயனுள்ள மாற்று பொறிமுறையொன்றாக முதலீட்டு பாதுகாப்பு சபையினைத் தாபித்தல் மற்றும் முதலீட்டாளர்களுக்கு கொள்கை நிலைத்தன்மை மற்றும் முன்னரே அறிந்து கொள்ளும் ஆற்றலை உறுதி செய்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு 2025 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கான கருதுகோள் பத்திரமொன்றைத் தயாரிப்பதற்கான உத்தியோகத்தர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள கருதுகோள் பத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.