2025-07-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரித்தல் – ‘உற்பத்தி பொருளாதாரம், அனைவரும் பொருளாதார அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்தல் என்னும் தொனி்ப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2026-2030 அரசாங்க நிதி கட்டமைப்பு, அரசாங்க நிதி மூலோபாய பிரகடனம் மற்றும் தேசிய கொள்கைக் கட்டமைப்பான 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்பவற்றுக்கு அமைவாக 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரிக்கும்போது தேசிய கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப் பட்டுள்ள முன்னுரிமைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி என்பவற்றின்பால் முன்னுரிமை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்து சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கும் அரசாங்க கொள்கை பிரகடனத்திற்கும் அமைவாக அமைச்சுக்களின் விடயநோக்கொல்லைகளின் கீழ் அந்தந்த அமைச்சுக்களினால் இனங்காணப்பட்ட கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேவையான நிதி ஏற்பாடுகளை ஒதுக்குவதற்கு சகல அமைச்சுக்களிடமிருந்தும் பிரேரிப்புகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. அதற்கிணங்க, 2026 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை 2025 ஒக்றோபர் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இரண்டாம் தடவை வாசிப்பானது (வரவுசெலவுத்திட்ட உரை) 2025 நவெம்பர் மாதத்தில் மேற்கொள்வதற்கும் மூன்றாம் தடவை வாசிப்புக்கான வரவுசெலவுத்திட்ட விவாதமானது 2025 நவெம்பர் மற்றும் திசெம்பர் மாதங்களில் நடாத்துவதற்கும் இயலுமாகும் வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |










