• Increase font size
  • Default font size
  • Decrease font size

2025-06-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
சிரேட்ட பிரசைகளுக்கான விசேட நிலையான வைப்புத் திட்டம்

– 2025 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரையில் பிரேரிக்கப்பட்டுள்ளவாறு சிரேட்ட பிரசைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க, பின்வருமாறு உத்தேச விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினைக் கொண்ட இலங்கை பிரசைகளினால் 2025‑07‑01 ஆம் திகதி தொடக்கம் 2025‑12‑31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் திறக்கப்படும் நிலையான வைப்புகள் சார்பில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.

* நிலையான வைப்பின் கால எல்லை 12 மாதங்கள் (ஒரு வருடம்) ஆகும் என்பதோடு, உச்ச வைப்புத் தொகையின் பெறுமதி ஒரு மில்லியன் ரூபாவாகும்.

* நிறையளிக்கப்பட்ட சராசரி நிலையான வைப்பு வட்டி விகிதாசாரத்திற்கு மேலதிகமாக வருடாந்தம் 3 சதவீதத்தை சேர்த்து கிடைக்கப்பெறும் பெறுமதி அல்லது உரிய வங்கியினால் வெளியிடப்பட்ட நிலையான வைப்பு வட்டி விகிதாசாரத்திற்கு 3 சதவீதத்தை சேர்த்து கிடைக்கப்பெறும் பெறுமதி என்னும் இரண்டில் ஆகக்கூடிய வட்டி விகிதாசாரத்தை செலுத்துதல்.

* மொத்த திட்டத்திற்கும் வட்டி நிவாரணத்தை செலுத்தும் பொருட்டு 30 பில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை ஒதுக்குதல்.