• Increase font size
  • Default font size
  • Decrease font size

2025-04-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
அரச வெசாக் உற்சவம் - ஶ்ரீ புத்த வருடம் 2569
- அதி வணக்கத்துக்குரிய மகாநாயக்க தேரர்களினதும் அகில இலங்கை சாசனரக்ஷக சபையினதும் ஆலோசனையின் பேரில் ஶ்ரீ புத்த வருடம் 2569 (2025) அரச வெசாக் உற்சவத்தை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் பௌத்த அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நுவரெலியா பௌத்த மத்தியநிலைய விகாரையில் நடாத்துவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான வெசாக் உறசவத்தை "பஜேத மித்தே கல்யாண - பஜேத பூரிசுத்தமே" (நல்ல ஆரோக்கியமான நற்பண்பு கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம்) என்ற தொனிப்பொருளின் கீழ் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, நுவரெலியா பௌத்த மத்தியநிலைய விகாரையை மையமாகக் கொண்டு தேசிய வெசாக் உற்சவத்தை நடாத்துவதற்கும், 2025 மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்துவதற்கும், இந்தக் காலப்பகுதிக்குள் பல்வேறு பௌத்த நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கமைத்து நடைமுறைப்படுத்துவதற்கும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினாலும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.