• Increase font size
  • Default font size
  • Decrease font size

2025-04-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
சூதாட்ட ஒழுங்குறுத்துகை அதிகாரசபையைத் தாபித்தல்
– கப்பல்கள் உட்பட கொழும்பு துறைமுக நகர கரையோர சூதாட்ட செயற்பாடுகள் மற்றும் நிகழ்நிலை சூதாட்ட செயற்பாடுகள் அடங்கலாக இலங் கையில் சூதாட்ட செயற்பாடுகள் சம்பந்தமாக விரிவானதும் முழுமையானதுமான விடயநோக்கெல்லையுடன்கூடிய தனி ஒழுங்குறுத்துநர் ஒருவராக செயலாற்றுவதற்கு சூதாட்ட ஒழுங்குறுத்துகை அதிகார சபையைத் தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் பொருட்டு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு 2025‑02‑24 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அங்கீகாரத்தின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க சூதாட்ட ஒழுங்குறுத்துகை அதிகாரசபை சட்டமூலத்தை அரசாங்க வரத்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமனறத்தில் சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.