2025-03-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ASEAN) துறைசார் கலந்துரையாடல் பங்குடமை - தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 10 நாடுகளை உள்ளடக்கிய ஒரு அரசியல் மற்றும் பொருளாதார சங்கமாகும். இது உலகில் வேகமாக வளர்ந்து வரும் சில பொருளாதாரங்களை கொண்டுள்ளதோடு, இந்த நாடுகள் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6.5 சதவீதம் பங்களிக்கின்றன. இலங்கை தற்போது அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகளுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்றது, ஆயினும், பகிரப்பட்ட பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆசியான் அமைப்புடன் வலுவான உறவு அத்தியாவசியமானதென்பது தெரியவருகின்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் அல்லாத நாடுகள் ஆசியான் அமைப்பில் உறுப்பபுரிமையினை பெற்றுக் கொள்ள முடியாமற் போனாலும், ஆசியான் அமைப்பின் நோக்கங்களுக்கு பங்களிக்கும் திறனின் அடிப்படையில் ஒரு வெளிவாரியான நாடொன்றுக்கு "துறைசார் கலந்துரையாடல் பங்குடமையாளர்" என்னும் அந்தஸ்தை வழங்கும் திறனை கொண்டுள்ளது. ஆசியான் அமைப்பில் இலங்கை 2019 ஆம் ஆண்டில் துறைசார் கலந்துரையாடல் பங்குடமையாளராவதற்கு ஆர்வ வெளிப்படுத்தல் கடிதம் மற்றும் ஆசியான் அமைப்பின் நோக்கங்களை அடைவதற்கான பிரேரிப்பு என்பவற்றை ஆசியான் அமைப்பு செயலகத்திற்கு முன்வைத்திருந்த போதிலும் அது தொடர்பாக தொடர் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஆதலால், வெளிவாரி தரப்பினர்களுக்கான ஆசியான் அமைப்பில் துறைசார் கலந்துரையாடல் பங்குடமையாளர்" என்னும் அந்தஸ்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஆசியான் அமைப்பினால் குறிப்பிட்டுள்ள நடவடிக்கை முறையினைப் பின்பற்றி 2019 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆர்வவெளிப்படுத்தல் கடித்ததிற்குரியதாக தெளிவான காலக்கட்டமைப்புடன்கூடிய புதிய வேலை / செயற்பாட்டுத் திட்டமொன்றைத் இலங்கையினால் சமர்ப்பிக்கும் பொருட்டு இலங்கை வௌிநாட்டலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |










