• Increase font size
  • Default font size
  • Decrease font size

2025-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
திருகோணமலை சாம்பூரில் 50 மெகாவொட் (கட்டம் - I) மற்றும் 70 மெகாவொட் (கட்டம் - II) சூரிய மின்சக்தி நிலையங்களைத் தாபித்தல்
– இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் கருத்திட்டமொன்றாக இலங்கை மின்சார சபையினதும் இந்தியாவின் தேசிய அனல் மின் நிலையத்தினதும் கூட்டுத் தொழில்முயற்சி கம்பனியினால் நிர்மாணித்து, உரிமையாக்கி, நடைமுறைப்படுத்தும் அடிப்படையில் திருகோணமலை சாம்பூரில் 50 மெகாவொட் (கட்டம் - I) மற்றும் 70 மெகாவொட் (கட்டம் - II) சூரிய மின்சக்தி நிலையங்களைத் தாபிக்கும் பொருட்டு இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. திருகோணமலை சாம்பூரில் நிர்மாணிப்பதற்கு திடட்மிடப்பட்டிருந்த நிலக்கரி மின்நிலைய கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை மின்சார சபையினால் இந்தியாவின் தேசிய அனல் மின் நிலையத்தினாலும் கூட்டுத் தொழில்முயற்சி கம்பனியொன்றாக தாபிக்கப்பட்ட Trincomalee Power Company Ltd. நிறுவனத்தினால் உத்தேச 50 மெகாவொட் சூரிய மின்சக்தி நிலைய கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.