2024-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
அஸ்வெசும நலன்புரி பிரதிலாபங்கள் கொடுப்பனவு திட்டத்திற்குத் திருத்தங்களை அறிமுகப்படுத்துதல் - அஸ்வெசும நலன்புரி பிரதிலாபங்கள் கொடுப்பனவு திட்டமானது 2023‑07‑01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, 2384/30 ஆம் இலக்கத்தைக் கொண்ட அதிவிசேட வர்த்மானி அறிவித்தலின் மூலம் மீண்டுமொரு தடவை திருத்தப்பட்டு 2024‑07‑01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி பிரதிலாபங்களைப் பெற்றுக்கொள்ளும் பயனாளி குடும்பங்களுக்கு 04 வகுதியின் கீழ் பிரதிலாபங்கள் உரித்தாக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடியின் தாக்கம் முழுமையாக குறையாதமையினால் நிலையற்றவர்கள் மற்றும் ஆபத்திற்கு உட்பட்டவர்கள் என்னும் வகுதிகளுக்குரியதாக முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் தெரிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரண்டாம் சுற்று விண்ணப்பங்களுக்குரியதாக தெரிவு செய்யப்படும் குடும்பங்கள் சார்பில் தொடர்ந்தும் குறுகிய காலப்பகுதிக்கு நிவாரணம் வழங்கவேண்டிய தேவை எழுந்துள்ளது. அதேபோன்று தற்போதைய வாழ்க்கைச் செலவினை கவனத்திற்கொள்ளும் போது தற்போது வழங்கப்படும் தொகை போதுமானதல்ல என்னும் விடயமும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும நலன்புரி பிரதிலாபங்கள் கொடுப்பனவு திட்டத்தை பின்வருமாறு திருத்துவற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
* வறிய மற்றும் மிக வறிய சமூக வகுதிகள் சார்பில் தற்போது செலுத்தப்படும் பிரதிலாபங்கள் கொடுப்பனவை முறையே 8,500/- ரூபாவிலிருந்து 10,000/- ரூபா வரையும் 15,000/- ரூபாவிலிருந்து 17,500/- ரூபா வரையும் அதிகரிப்பதற்கும் அதற்கிணங்க, திருத்தியமைக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரி பிரதிலாபங்கள் கொடுப்பனவு திட்டத்தை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திகதியிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கும். * நிலையற்றவர்கள் என்னும் சமூக வகுதி சார்பில் பிரதிலாபங்கள் செலுத்தப்படும் காலப்பகுதியை 2025‑03‑31 ஆம் திகதிவரை செல்லுபடியாகும் விதத்தில் நீடிப்பதற்கும். * ஆபத்திற்கு உட்பட்ட சமூக வகுதி சார்பில் பிரதிலாபங்கள் செலுத்தப்படும் காலப்பகுதியை 2025‑12‑31 ஆம் திகதிவரை செல்லுபடியாகும் விதத்தில் நீடிப்பதற்கும். |










