2024-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
இலவசமாக சுற்றுலா விசா வழங்குவது தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கை - இலவசமாக சுற்றுலா விசா வழங்குவது தொடர்பாக ஏனைய நாடுகள் பின்பற்றும் முறைகள் பற்றி ஆராய்ந்து சிபாரிசுகளுடனான அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் பொருட்டு நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு 2024‑04‑25 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் இலங்கையுடன் சுற்றுலாத் துறையில் போட்டியிடும் 08 நாடுகள் குறித்து விடயங்களை ஆராய்ந்து விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளதுடன், மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் இந்த அறிக்கையானது அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிபுணர்கள் குழுவின் சிாபரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த சிபாரிசுகளை அடிப்டையாகக்கொண்டு 2024‑10‑01 ஆம் திகதி தொடக்கம் 06 மாத காலத்திற்கு இனங்காணப்பட்ட ஆகக்கூடுதலாக 35 நாடுகளுக்கு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் இலவச விசாக்களை வழங்குவதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |