2023-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2023 ஆம் ஆண்டில் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான பிரேரிப்பு - நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினாலும் மின்சார கட்டணங்களை திருத்துவது சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட பிரேரிப்பானது அமைச்சரவையினால் பரிசீலனை செய்யப்பட்டது. தற்போதைய நிதி நிலைமையின் கீழ் இலங்கை மின்சார சபைக்குத் தேவையான நிதியினை வழங்குவதற்கு திறைசேரிக்கு சாத்தியம் இல்லையெனவும் ஆதலால் நாட்டில் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கும் மின்சார பாவனையாளர்களுக்கு நேரிடும் தாக்கங்களை இயலுமான வரை குறைத்து மின்சார விநியோகத்திற்கு செலவாகும் செலவினை மாத்திரம் தழுவுவதற்கு தற்போது நடைமுறையிலுள்ள மின்சார கட்டணத்தை திருத்துவது தவிர வேறு மாற்று வழியில்லையெனவும் அமைச்சரவையினால் மேலும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கிணங்க, பின்வருமாறு நடவடிக்கை எடுப்பதற்கு அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. * இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் உரிய தரப்பினர்களுடன் உசாவுதலைச் செய்து மேலும் ஆராய்ந்து அத்தகைய ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமாயின் 2023‑02‑15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் குறித்த திருத்தங்களை சமர்ப்பித்தல். * இதுவரை மின்சார கைத்தொழில் சம்பந்தமாக தற்போது அமுலிலுள்ள பொதுக் கொள்கை வழிகாட்டல் திருத்தங்களுக்கு அமைவாக இடைக்கால நடவடிக்கையொன்றாக 2023‑01‑01 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக இலங்கை மின்சார சபையினால் பிரேரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்து வதற்கு இலங்கை மின்சாரசபையும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவும் இணைந்து தேவையான நடவடிக்கையினை எடுத்தல். * இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் திருத்தங்கள் எதுவும் முன்வைக்கப்பட்டால் குறித்த திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் நடவடிக்கை எடுத்து எதிர்வரும் மாதாந்த மின்சார பட்டயல்களின் மூலம் தேவையான சீராக்கல்களை செய்தல். |