• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் அடையாள கட்டமைப்பை நடைமுறைப் படுத்துதல்
- இலங்கையில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் அடையாள கட்டமைப்பினைத் தாபிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை தேசிய மட்டத்திலான நிகழ்ச்சித்திட்டமொன்றாக முன்னுரிமையளித்து நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆயளவை தரவுகளின் மீது தனிநபர் அடையாளத்தை உறுதிசெய்யும் உபகரணமொன்று, இணையத் தகவல் ஊடுவௌியில் ஆட்களின் அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய டிஜிட்டல் கருவியொன்று மற்றும் குறித்த இரண்டு கருவிகளை இணைப்பதன் மூலம் டிஜிட்டல் மற்றும் பௌதிக சூழலில் ஆள் அடையாளத்தை திட்டவட்டமாக அடையாளம் காணுதலை உத்தேச ஒருங்கிணைந்த டிஜிட்டல் அடையாள கட்டமைப்பின் கீழ் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 2019 திசெம்பர் மாதத்தில் இந்தியாவின் மாண்புமிகு பிரதம அமைச்சருக்கும் அதிமேதகைய சனாதிபதி அவர்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு கலந்துரை யாடல்களின்போது இலங்கையில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் அடையாள கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியினை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டது. இதற்கிணங்க, குறித்த நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு உரிய பணிகளை மேற்கொள்வதற்கும் இந்த நிதி உதவியின் கீழ் உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் தொழினுட்ப அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.