2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் அறவிடாது விசா வழங்குதலை நீடித்தல் – 48 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் நிகழ்ச்சித்திட்டமானது 2019 ஆகஸ்ட் 01 ஆம் திகதியிலிருந்து 06 மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தும் பொருட்டு 2019 யூலை 30 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இலவச விசா நிகழ்ச்சித்திட்டமானது நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் இந்த நாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகைதந்த சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு கட்டணம் அறவிடாது விசா வழங்கும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள குறித்த 48 நாடுகளுக்கும் 2020 பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 2020 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிவரை மேலும் 03 மாத காலத்திற்கு நீடிக்கும் பொருட்டு சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |