• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-08-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையில் கல்விச் சபையொன்றை தாபித்தல்
2 மனித உரிமைகள் தொடர்பில் அமைச்சுக்களுக்கிடையிலான நிலையியற் குழுவொன்றை தாபித்தல்
3 2026-2030 காலப்பகுதிக்கான இலங்கையின் தேசிய மருந்துக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல்
4 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் சேவைகளை பயன்படுத்தி இலங்கை தேசிய மருத்துவமனையின் இருதய மற்றும் மார்பு கூட்டு அறுவை சிகிச்சை சேவையை விஸ்தரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
5 தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஒப்படைப்பது சம்பந்தமாக இலங்கைக்கும் போலாந்து குடியரசிற்கும் இடையிலான ஒப்பந்தம்
6 கொரியக் குடியரசின் Korea Institute of Ceramic Engineering and Technology நிறுவனத்திற்கும் இலங்கையின் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையிலான ஆராய்ச்சிப் பணிகளை வெளித்தரப்புக்கு ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
7 முன்னாள் தேசிய இயந்திரசாதனங்கள் நிறுவனத்திற்குச் (NEMO) சொந்தமானதும், தற்போது அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் கட்டுக்காப்பில் உள்ளதும் பயன்படுத்தக் கூடியதுமான வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை மாகாண சபைகள், பிரதேச சபைகள் மற்றும் ஏனைய அரசாங்க நிறுவனங்களுக்கு கையளித்தல்
8 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் கல்வி சார்ந்த விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்குதல்
9 கணனி ரீதியிலான சீட்டிழுப்பிற்கான லொத்தர் சீட்டுக்களை அச்சிடுதல், விநியோகித்தல், கொண்டு வந்து கையளித்தல் என்பவற்றுக்கான பெறுகை
10 'தித்வா' சூறாவளியால் சேதமடைந்த சிறிய நீர்ப்பாசன கட்டமைப்புகளை மறுசீரமைப்பதற்கான துரித நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
11 செத்சிறிபாய கட்டம் - III இன் மீதி நிர்மாணிப்பு வேலைகளைப் பூர்த்தி செய்தல்
12 ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக மருந்துகளின் பெறுகை
13 நாடகம், அரங்காட்டல் கலை மற்றும் இலக்கியத் துறையை மேம்படுத்துவதற்கான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
14 'தித்வா' சூறாவளியின் காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள தேசிய அடிப்படை கற்கைகள் நிறுவனத்தின் ஆய்வுகூட கட்டிடத் தொகுதியின் கட்டமைப்பு ரீதியிலான நிலையான தன்மையை உறுதிப்படுத்தல்
15 கட்டான தேசிய பொலிஸ் கல்லூரிக்கான புதிய விடுதி கட்டடத்தின் எஞ்சிய நிர்மாணிப்பு வேலைகளை பூர்த்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
16 இலங்கைக்கு வெளியே அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்றங்கள் தொடர்பில் 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் குற்றவியல் குற்றமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் சட்டத்தை திருத்தம் செய்தல்
17 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம் மற்றும் (123 ஆம் அத்தியாயம்) 1891 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சங்கங்கள் கட்டளைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
18 இராவணா எல்ல சரணாலயத்தில் அமைந்துள்ள 'நில்திய பொக்குண' பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குறுத்தலின் கீழ் ஆரம்பித்தல்
19 கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானிக் கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
20 ‘பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல்’ என்னும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.