• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-06-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அம்பாந்தோட்டை மாநகர சபை எல்லைக்குள் காலியபுர கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள காணித் துண்டை கைத்தொழில் மற்றும் கொள்கலன் சார்ந்த அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக குத்தகை அடிப்படையில் விடுவித்தல்
2 ஊழியர் சேமலாப நிதியத்தினதும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினதும் சகல பணிகளையும் ஒருங்கிணைந்த நிர்வாக கட்டமைப்பொன்றின் கீழ் நடைமுறைப்படுத்து வதற்கான சாத்தியக்கூறுகளைப் பரிசீலிப்பதற்காக சிரேஷ்ட உத்தியோகத்தர் குழுவொன்றை நியமித்தல்
3 இலங்கை மற்றும் துருக்கிக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட விமான சேவைகள் ஒப்பந்தத்தை திருத்துதல்
4 ஆசிய பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் 21 ஆவது வழிநடத்தல் குழுக் கூட்டம் மற்றும் 14 வது ஆசிய பசிபிக் பிராந்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பு பேரவையை இலங்கையில் நடாத்துவதற்கு அனுசரணை வழங்குதல்
5 யானை - மனித மோதல் முகாமைத்துவத்திற்காக தேசிய செயற்பாட்டு திட்டத்தை தயாரித்தல்
6 பாடசாலை விடுதிகளின் வசதிகளை மேம்படுத்துதல்
7 பதுளை - ஹாலி எல வீதிப் பகுதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல்
8 பேஸ்லைன் வீதி நீடிப்புக் கருத்திட்டம் - கட்டம் III இற்கான நிர்மாணிப்பு சார்பில் காணி சுவீகரித்தல் செயற்பாட்டினால் பாதிக்கப்படும் அத்துமீறிய குடியிருப்பாளர்களை மீளக் குடியமர்த்துதல்
9 கொலன்னாவை பிரதேசத்தில் வெள்ள அபாயத்திற்குள்ளாகும் குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிலத்தடி எண்ணெய் குழாய் பாதையின் மேல் அத்துமீறி குடியேறியுள்ள குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கும் வீடுகளை ஒதுக்குதல்
10 நீர்கொழும்பு பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடத்தை நிர்மாணித்தல்
11 ‘தித்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களை மீளக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டம்
12 தம்புத்தேகம - இராஜாங்கனை வீதியில் அமைந்துள்ள அங்கமுவ மதகு (தீப்பெட்டி பாலம்) ஊடாக புதிய திறந்த பாலமொன்றை நிர்மாணித்தல்
13 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறை பாதுகாப்பு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்ட அரசிறை பாதுகாப்பு கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
14 கொள்கை அடிப்படையிலான கடன் வசதிகள் - 2026 இன் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் கடன் தொகையை அதிகரித்தல்
15 ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒத்துழைப்பின் மீது ‘தித்வா சூறாவளியின் பின்னரான மறுசீரமைப்பு மற்றும் வாழ்வாதார உதவி கருத்திட்டத்தை’ நடைமுறைப்படுத்துதல்
16 இறுதி வரவுசெலவுத்திட்ட நிலை அறிக்கை (வருடாந்த அறிக்கை) - 2025
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.