• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-04-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட சனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் அப்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு என்பவற்றினால் வழங்கப்பட்ட அறிக்கைகளிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல்
2 தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் சேவைக்கான உரிமப்பத்திரம் வழங்கும்போது பின்பற்றவேண்டிய புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துதல்
3 புத்த பெருமானின் புனித தாதுக்களை அமெரிக்காவின் Texas இல் அமைந்துள்ள மஹா விபஸ்சனா தியான நிலையத்திற்கு கொண்டு சென்று வழிபடுதல் மற்றும் காட்சிப்படுத்தல்
4 தேசிய வீடமைப்புக் கொள்கையைத் திருத்துதல்
5 2015 - 2019 காலப்பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்பு கருத்திட்டங்கள் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிபாரிசுகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தல்
6 இலங்கை பிக்குமார் பல்கலைக்கழகத்திற்கு பல்நோக்கு கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் கருத்திட்டம்
7 வணிகக் கல்விக்காக செயல்முறைசார் கற்றல் மையங்களை வலய மட்டத்தில் தாபித்தல்
8 களனிவெளி புகையிரத பாதையை அவிசாவளைக்கு அப்பால் இரத்தினபுரி வரை நீடிப்பற்கான சாத்தியத் தகவாய்வு மற்றும் விரிவான திட்டத்தை தயாரிப்பதற்கான ஆலோசனைச் சேவைகளை பெற்றுக் கொள்ளல்
9 ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள துபாய் சர்வதேச விமான நிலையத்தில் Sri Lankan Airlines சேவையின் தரைக் கையாள்கை சேவைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
10 சிறுநீரக நோயாளிகளின் இரத்தச் சுத்திகரிப்பிற்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் அடங்கிய 800,000 பைகளை வழங்குவதற்கான பெறுகை
11 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
12 இலங்கை கைத்தொழில் மாற்ற மற்றும் புத்தாக்க அதிகாரசபையைத் தாபிப்பதற்கு சட்டமொன்றைத் தயாரித்தல்
13 குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
14 ‘ஒன்றிணைந்த தேசம்’ போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களை தாபித்தல் மற்றும் பதவியணியினரை ஆட்சேர்ப்பு செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.