• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-03-16 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் கடற்றொழில் துறையில் கடமைகளில் ஈடுபட்டுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குதல்
2 eZCash மற்றும் mCash பணப் பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய பணப் பரிமாற்றங்களில் ஈடுபடுபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்
3 நீர் சுற்றாடல் கண்காணிப்பு மற்றும் தரவு அடிப்படையிலான கொள்கை அமுலாக்கத்திற்கான பாரிய தரவு முறைமையொன்றைத் தாபிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
4 மாகாண கல்வித் திணைக்களங்கள், வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் கோட்டக் கல்வி அலுவலகங்களின் பௌதிக உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் உபகரணங்களை வழங்குதல்
5 மாலைதீவு மாலே விமான நிலையத்தில் SriLankan Airlines Ltd. நிறுவனம் சார்பில் தரைக் கையாள்கை சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
6 மன்னார் மின் வழங்கல் உப நிலையத்திலிருந்து முள்ளிக்குளம் சேகரிப்பு உபமின் வழங்கல் நிலையம் வரை இரட்டைச் சுற்று அனுப்பீட்டு கம்பிவழியை நிர்மாணித்தல்
7 2024 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (செயல் நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்களை அல்லது ஊக்கு விப்புகளை வழங்குதல் பற்றிய வழிகாட்டு நெறிகள் - தீர்வையற்ற தொழிற்பாடுகள்) ஒழுங்குவிதிகளை திருத்துதல்
8 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளிப்படுத்தப்பட்ட பயணிகள் சேவை அனுமதிப்பத்திர கைமாற்றல் ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
9 (203 ஆம் அத்தியாயம்) மோட்டார் வாகனச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 (218 ஆம் அத்தியாயம்) நஞ்சு வகைகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்
11 (188 ஆம் அத்தியாயம்) தொல்பொருளியல் கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஒழுங்குவிதிகளை ஆக்குதல்
12 1980 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க மத்திய கலாசார நிதிய சட்டத்தை திருத்துதல்
13 2026 ஆம் ஆண்டிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கை அடிப்படையிலான கடன் வழங்கல்
14 தேசிய நாமல் உயனவை’ தேசிய மரபுரிமையொன்றாக பிரகடனப்படுத்துதல்
15 பொருளாதார பணிகளை முறைப்படுத்துவதற்காக மேற்பார்வை குழுக்களைத் தாபித்தல்
16 நுரைச்சோலை லக்விஜய மின்சார உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான அவசர நிலக்கரி பெறுகை
17 பெற்றோலியம் மற்றும் பெற்றோலியம் சார்ந்த உற்பத்திகள், திரவ பெற்றோலிய எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் பெறுகை
18 நிலவுகின்ற எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக வாரத்தின் புதன்கிழமையை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.