• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-01-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கல்விசார் ஒத்துழைப்புகளை நோக்காகக் கொண்டு இலங்கைப் பல்கலைக்கழ கங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொள்தல்
2 மனிதக் கடத்தலைக் கண்காணிப்பதற்கும் ஒழிப்பதற்குமான தேசிய மூலோபாயச் செயற்திட்டம் - 2026 - 2030
3 அரசாங்கத்திற்குச் சொந்தமான பங்களாக்களை பொருளாதார ரீதியில் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் பொருட்டு முதலீட்டுப் பிரேரிப்புகளை கோரல்
4 செயலாற்றுகை அடிப்படையிலான கொடுப்பனவு முறைமைக்கிணங்க நோய்களை நிர்ணயிக்கும் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளும் பிரதான உபகரணங்களின் சேவையினை அரசாங்க - தனியார் பங்குடமை திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளல்
5 அரசாங்க வைத்தியசாலைகளில் இரத்தச் சுத்திகரிப்பு சேவைகளை விரிவுபடுத்துவதற்கு அரசாங்க - தனியார் பங்குடமை திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்
6 இலங்கையில் மேம்படுத்தப்பட்ட திரிபோஷா நிகழ்ச்சித்திட்டத்திற்காக முகங்கொடுக்கக் கூடிய உயர்தர சோளம் சார்ந்த உணவு முறைமையைக் கட்டியெழுப்புதல் தொடர்பான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
7 கண்டி யாழ்ப்பாணம் வீதியின் (A-009) மஹய்யாவ தரைக்கீழ் பாலமொன்றை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தைக் கையளித்தல்
8 மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு வாகன இலக்கத் தகடுகளை அச்சிட்டு விநியோகிப்பதற்கான பெறுகை
9 நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட "Harbour View Residencies" வீடமைப்பு கருத்திட்டத்திலிருந்து 350 வீட்டு அலகுகளை இலங்கை பொலிசுக்காக கொள்வனவு செய்தல்
10 மேர்பன் வகை மசகு எண்ணெய் பீப்பாய்கள் 2,800,000 ± 5% (04 கப்பல் சரக்குத் தொகுதிகள்) கொள்வனவு செய்வதற்கான நீண்டகால பெறுகை
11 தேசிய லொத்தர் சபை சார்பில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
12 2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி உரிம அறவீடு) ஒழுங்குவிதிகளை திருத்துதல்
13 நில அளவையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
14 விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான விளையாட்டுக் கட்டடத் தொகுதிகளின் அபிவிருத்தி மற்றும் நிர்வாகத்தை முறைப்படுத்தும் பொருட்டு முகாமைத்துவ சபையொன்றை நியமித்தல்
15 அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் போன்ற பயிர் செய்கைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
16 2026 ஆம் ஆண்டு சார்பில் முப்படைகளுக்கும் தேவையான உணவுப் பொருட்களுக்கான (பச்சை, உலர் மற்றும் பிற) பெறுகை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.