• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-09-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நடைமுறையிலுள்ள ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2016 ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேசிய ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பள சட்டத்தைத் திருத்துதல்
2 தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துதல்
3 யுத்தம் நிலவிய காலப்பகுதியில் யுத்த பிரதேசங்கள் மற்றும் யுத்த பிரதேசமாக பெயர் குறிப்பிடப்படாத பிரதேசங்கள் என்பவற்றில் கடமையாற்றும் போது நேரடி பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக முற்றாக அங்கவீனமுற்ற மற்றும் மரணித்த முப்படைகள் மற்றும் இலங்கை பொலிஸ் என்பவற்றின் உறுப்பினர்களுக்கு 55 வயது பூர்த்தியாகும் வரை செலுத்தப்பட்ட சம்பளம் மற்றும் படிகளை மரணித்த உறுப்பினர்களில் தங்கி வாழ்வோருக்கும் அங்கவீனமுற்ற உறுப்பினர்களுக்கும் அவர்களுடைய ஆயுட்காலம் வரை செலுத்துதல்
4 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல், ஆபரணங்கள் அதிகாரசபை சட்டத்தை திருத்துத
5 ஶ்ரீ ஜயவர்தனபுர தேசிய தாதியர் பயிற்சி கல்லூரியை கொழும்பு பல்கலைக்கழகத்தின் தாதி விஞ்ஞான பீடத்திற்கு உடைமையாக்குத
6 நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தினை விரிவுபடுத்துத
7 இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு தனி வேறான சட்டமொன்றை வரைதல்
8 கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சை தாபிப்பதற்காக புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தல்
9 தெற்காசிய வலயத்தின் ஒருங்கிணைந்த பல் இடர் முன் எச்சரிக்கை முறைமை RIMES பிராந்திய மையத்தை தாபித்தல்
10 அரசாங்கத் துறை சார்ந்த நிறைவேற்று உத்தியோகத்தர்களுக்கு விசேட படியொன்றை வழங்குதல்
11 புதிய கல்வி சட்டமூலத்தை வரைதல்
12 காலிமுகத்திடலை அபிவிருத்தி செய்தல்
13 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டு சட்டத்தின் 41 ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
14 நுவரெலியா மாவட்டத்தில் சங்கிலி பாலம் கிராமிய நீர்வழங்கல் திட்டத்தை நிர்மாணித்தல்
15 பசளை கொள்வனவு - 2019
16 மண்சரிவு ஆபத்துக்களை தடுக்கும் கருத்திட்டத்திற்காக சப்பிரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள வீதிகளில் ஆறு இடங்களில் மண்சரிவினைத் தடுக்கும் நடவடிக்கைகள் - பொதி 02
17 அராபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தினால் நிதியளிக்கப்படும் 25 பாலங்களை மீள் நிர்மாணிக்கும் கருத்திட்டம் - சிவில் வேலைகளுக்கான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்த
18 பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் விமான அறை பயணப் பொதிகளுக்கான வெடிப்பொருட்களை கண்டறியும் முறைமையினை வழங்கி, பொருத்தி, கையளித்தல்
19 இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு கப்பலிலிருந்து கரையோரம் வரை செயற்படும் மேலதிக பாரந்தூக்கியொன்றினை கொள்வனவு செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.