• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-09-26 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சருவதேச எல்லைகடந்து புரியப்படும் பல்வேறுபட்ட குற்றங்களை தடுப்பது தொடர்பில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுதல்
2 காலி மஹமோதர மகப்பேற்று வைத்தியசாலையின் நிருமாண வேலைகளை பூர்த்தி செய்வதற்காக குறைநிரப்பு நிதி உதவியைப் பெற்றுக் கொள்ளல்
3 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கான குறுங்கால தீர்வுகள்
4 பூகோள அமைவிட முறைமையினை (GPS) அறிமுகப்படுத்துவதற்கூடாக புகையிரத செயற்பாடுகளின் வினைத்திறனை மேம்படுத்துதல் மற்றும் புகையிரத இயக்கம் தொடர்புபட்ட தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குதல்
5 வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு தங்குமிட வசதிகளை வழங்குதல்
6 2017 மே மாதம் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக வீடுகள் முழுமையாக சேதமுற்றிருந்த அல்லது தங்குவதற்கு பொருத்தமற்று காணப்பட்டிருந்த ஆட்களுக்கு வீட்டு வாடகைப் படியை மேலும் செலுத்துதல்.
7 கடும் நிலச்சரிவு ஆபத்துள்ள மாவட்டங்களில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிரந்தர மாவட்ட அலுவலகங்களைத் தாபித்தல்
8 அதிநவீன தேசிய விஞ்ஞான நிலையமொன்றைத் தாபித்தல்“
9 அணுஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்புடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளல்
10 சமுதாயத்திற்கான விஞ்ஞான, தொழினுட்பவியல் கருத்தரங்கு - 2018
11 கராபிட்டிய போதனா வைத்தியசாலையிலுள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மேம்படுத்துதல்
12 பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் உதவி மருத்துவ சேவைகளுடன் கூடிய இருதய கெத்தீட்டர் ஆய்வுகூடமொன்றை அமைத்தல்
13 இலங்கை ஆயுள்வேத மருந்துப் பொருள் கூட்டுத்தாபனத்தின் அநுராதபுர பிராந்திய அலுவலகம், விற்பனை நிலையம் மற்றும் மருந்து கொள்வனவு நிலையம் என்பவற்றை ஒரே கட்டடத்தில் தாபித்தல்
14 சப்பிரகமுவ மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் அபிவிருத்தி
15 கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு புதிய கட்டட தொகுதியொன்றை நிர்மாணித்தல்“
16 கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற அரசாங்க விருது விழாக்கள் மற்றும் வேறு ஞாபகார்த்த விழாக்கள் தொடர்பாக ஒதுக்கப்படும் நிதி ஏற்பாட்டை அதிகரித்துக் கொள்ளல்“
17 கைத்தொழில்களை தாபிக்கும் பொருட்டு பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
18 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இரத்தினபுரி கல்வி நிலையத்தை தாபிப்பதற்காக காணித் துண்டொன்றை வழங்குதல்
19 கொள்ளுபிட்டியவில் இருந்து தெஹிவளை வரை பொழுதுபோக்கு சார்ந்த கடற்கரைப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல்
20 தெங்குத் துறையின் செயற்றிறனுக்காக 2018 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள புதிய கருத்திட்டங்கள்
21 சூரிய சக்தி மூலம் மின்சார உற்பத்திக் கருத்திட்டங்களுக்காக கைவிடப்பட்ட மற்றும் பயிரிடப்படாத வயற் காணிகளைப் பயன்படுத்துதல்
22 முறையான கமத்தொழில் காப்புறுதித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
23 சிறிய நீர்ப்பாசன முறைமைகளுடன் இணைந்த இனங்காணப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
24 2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை (விசேட ஏற்பாடுகள்) சட்டக் கோவை சட்டத்திற்கான திருத்தங்கள் - (தடுப்புக் காவலிலுள்ள ஆட்களின் உரிமைகள் - சட்ட மதியுரைஞர் ஒருவரை அணுகுதல்)
25 தேசிய கல்விக் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரியர் பயிலுநர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த உணவு படியை அதிகரித்தல்
26 குருநாகல் மாநகர எல்லைகளுள்ளும் வாரியபொல நகரத்திலும் புதிய இரண்டு தேசிய பாடசாலைகளை தாபித்தல்
27 பெருந்தோட்ட மக்களின் நலநோம்பல் வசதி ஏற்பாட்டிற்காக பிரதேசசபை சட்டத்தை திருத்துதல்
28 மனித செயற்றிறன் ஆய்வுகூடத்தை நிருமாணித்தல்
29 தேசிய விளையாட்டு நூதனசாலையின் புதிய கட்டடத்தின் 2 ஆம் கட்டத்தை பூர்த்தி செய்தல்
30 கண்டி பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி கருதி வீடமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் கண்டி வைத்தியசாலை காணியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்களை வௌியேற்றுதல்
31 மருதானை புகையிரத நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரை பாலங்கள் மற்றும் புகையிரத பாதைகளைத் வடிவமைப்பதற்கான மதியுரை சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
32 கடுவெல - அத்துருகிரிய வீதி மற்றும் வல்கம - அத்துருகிரிய வீதி ஆகியவற்றை மேம்படுத்துதல்
33 களனி கங்கைக்கு மேலாக புதிய பாலமொன்றை நிருமாணிப்பதற்கான கருத்திட்டம், இரும்பு பால பகுதி நிருமாணத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
34 தாதியர் பீடத்தை தாபித்தல்
35 அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் தொற்றாத நோய்கள் தொடர்பான ஆயுள்வேத ஆராய்ச்சி மருத்துவமனையொன்றைத் தாபித்தல்
36 வாழ்க்கை தொழில் தொழினுட்பவியல் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர் விடுதியொன்று, சிற்றுண்டிச்சாலையொன்று மற்றும் வேலைத்தளமொன்று ஆகியவற்றை நிருமாணித்தல்
37 புத்தளம், நுரைச்சோலை விக்டோரியா தோட்டத்தில் வீடமைப்புத் தொகுதியின் அணுகு வீதிகள், மதகுகள் மற்றும் வீதி மின் விளக்குகளை நிர்மாணித்தல்
38 மின்னலைவாங்கி பொதி மின்கடத்திகளின் (Aerial Bundle Conductors) வழங்கல் மற்றும் விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
39 Litro Gas Lanka Ltd கம்பனியின் அம்பாந்தோட்டை LP எரிவாயு நிரப்பும் பொறித்தொகுதி கருத்திட்டம்
40 நுகேகொடை மிரிஹானையில் உத்தேச பொலிஸ் வீரர்களுக்கான வீடுகள் மற்றும் உணவுச்சாலை கட்டடத்தை நிருமாணித்தல்
41 கால்நடைவளர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ள மிருகவைத்திய சத்திர சிகிச்சையாளர்களுக்கு நவீன பால்சார் பண்ணை நடைமுறைகள் தொடர்பில் பயிற்சியினை வழங்குதல்
42 ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப் படுத்துதல் - (கட்டம் 4)
43 புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான உத்தியோகபூர்வ வேட்புமனுக்களை மீண்டும் கோருதல்
44 உள்ளூராட்சி அதிகாரசபைகள் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு மீளாய்வு குழு அறிக்கையிலுள்ள குறைபாடுகளை திருத்துதல்
45 தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.