• Increase font size
  • Default font size
  • Decrease font size

2026-08-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் கையிருப்பிலுள்ள நெற்தொகைகளை அரிசியாக்கி சந்தைக்கு வழங்குதல்

- 2026-07-22 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட 34 ஆவது உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூட்டத்தில் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்யும் செயற்பாட்டிற்கு வசதியளிக்கும் நோக்கில் நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் கையிருப்பிலுள்ள நெற்தொகைகளை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாக அரிசியாக்கி சந்தைக்கு விடுவிப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு நடவடிக்கை எடுப்பதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினாலும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

  • நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் கையிருப்பிலுள்ள நெற்தொகையிலிருந்து 30,000 மெற்றிக் தொன்னை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாக அரிசியாக்குதல்.
  • 30,000 மெற்றிக் தொன் நெல்லை அரிசியாக்கி 5 கிலோகிராம், 10 கிலோகிராம், 25 கிலோகிராம் மற்றும் 50 கிலோகிராம் பொதிகளாக வழங்குவதற்கு கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தினால் நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்துள்ள நெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்து ஆர்வ வெளிப்படுத்தலைக் கோருதல்.
  • 2025-12-15 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நெல் சந்தைப்படுத்தல் சபை, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், வரையறுக்கப்பட்ட லங்கா சதொச, அறுவடையின் பின்னரான தேசிய முகாமைத்துவ நிறுவனம் மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களைக் கொண்டு நியமிக்கப்பட்டுள்ள விலைக்குழுவினால் நெல், அரிசியாக்கப்படும் விகிதாசாரம் மற்றும் அரிசிக்கான விலையை தீர்மானித்தல்.
  • மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரிசியை லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் மற்றும் தனியார் தரப்பினர் ஊடாக சந்தைக்கு விடுவித்தல்.