2026-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கடற்றொழிலில் ஈடுபடுதல் தொடர்பிலான சமவாயத்தை (C188) அங்கீகரித்தல் - 2007 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 96 ஆவது சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தில் கடற்றொழிலில் ஈடுபடுதல் தொடர்பிலான சமவாயமானது (C188) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடற்றொழிலாளர்களின் சிறந்த சேவை நிலைமைகள், சுகாதார வசதிகள், மருத்துவ சிகிச்சைகளுக்கான அணுகல் மற்றும் பாதுகாப்பு என்பன தொடர்பிலான தரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 315,000 இற்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்களை கொண்டுள்ள இலங்கை கடற்றொழிலானது அதன் தன்மை மற்றும் பாரம்பரிய முறைகள் காரணமாக முறைசாரா விதத்தில் நிலவுகின்றதோடு, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சேவை நிபந்தனைகள் சம்பந்தமாக பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. ஆதலால், இந்த சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கும் பொருட்டு கடற்றொழில் சார்பில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரங்களை அறிமுகப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் கடற்றொழிலில் ஈடுபடுதல் தொடர்பிலான சமவாயத்தினை (C188) அங்கீகரிப்பதற்கும் குறித்த இந்த தரங்களை தாபிக்கும் பொருட்டிலான ஒழுங்குவிதிகளை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரினாலும் தொழில் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |










