• Increase font size
  • Default font size
  • Decrease font size

2026-04-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
பொதுநலவாய கற்றல் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் நுண்-சான்றிதழ்கள் தொடர்பான கொள்கை மற்றும் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமான விசாரணை நியதிகளை தயாரித்தல்

- நுண்-சான்றிதழ்கள் என்பது வேகமான தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் மாற்றமடைந்து வரும் தொழில் சந்தை கேள்விக்கு முகங்கொடுக்கும் விதமாக வாழ்நாள் கற்றல், தொழிற் படையின் திறன்களை மேம்படுத்தல் மற்றும் வேலைவாய்ப்புக்களை ஊக்குவித்தல் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொறிமுறை யொன்றாகும். அதற்கிணங்க, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம் அத்துடன் தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் தொகுதிகளை வலுப்படுத்துவதற்கும் இலங்கையின் கல்வித் தகைமைகளின் சர்வதேச ஒப்பீட்டுத்தன்மையையும் அங்கீகாரத்தையும் மேம்படுத்துவதற்கும் நுண்-சான்றிதழ்கள் தொடர்பான தேசிய கொள்கை மற்றும் பாடநெறி அலகு பரிமாற்றக் கட்டமைப்பொன்றை (Credit Transfer Framework) தாபிக்கும் தேவை இனங்காணப் பட்டுள்ளது. அதற்கிணங்க, பொதுநலவாய கற்றல் நிறுவனத்துடன் (Commonwealth of Learning) இணைந்து குறித்த பணிகளை மேற்கொள்வதற்கான விசாரணை நியதிகளை (Terms of Reference) தயாரிப்பதற்கு 2026 மே மாதத்தில் கொழும்பில் செயலமர்வொன்றை நடாத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, பொதுநலவாய கற்றல் நிறுவனத்தின் ஒத்துழைப்பு மற்றும் முழுமையான நிதிப் பங்களிப்புடன் இலங்கைக்காக நுண்-சான்றிதழ்கள் தொடர்பான தேசிய கொள்கை மற்றும் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமாக பொதுநலவாய கற்றல் நிறுவனம் மற்றும் இலங்கையின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியவற்றிற்கிடையில் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடும் பொருட்டு கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.