• Increase font size
  • Default font size
  • Decrease font size
விசேட தீர்மானங்கள்
2012-11-14 ஆந் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம்
அமைச்சரவைப்பத்திர இலக்கம் : 12/1534/558/041-I (2012-11-14)

அரசாங்க சேவைகள் ஆணைக்குழு செயற்படாதிருந்த 2009‑04‑09 ஆம் திகதியிலிருந்து  2011‑05‑12 ஆம் திகதி வரையுள்ள காலப்பகுதியில் (இந்த ஆணைக்குழுவின் சார்பில்) அமைச்சரவையினால் வழங்கப்பட்ட ஒழுக்காற்று கட்டளைகளுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள மேன் முறையீடுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தல் -

(2012‑10‑18 ஆம் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்பிலுள்ள 41 ஆம் இலக்க  தீர்மானத்திற்குரியதாக) மேலே குறிப்பிடப்பட்ட அறிக்கையின் பொருளடக்கம் அமைச்சரவை யினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், நிருவாக விதிமுறைகள் வழுவப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு  பின்வரும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனத்  தீர்மானிக்கப்பட்டது :

(அ)    2009‑04‑09 ஆம் திகதியிலிருந்து 2011‑05‑12 ஆம் திகதிவரை அரசாங்க சேவைகள்  ஆணைக்குழுவானது செயற் படாமலிருந்த காலப்பகுதிக்குள் அந்த ஆணைக்குழுவானது செயற்பட்டிருக்குமிடத்து அதன் நோக்கெல்லைக்குள் உட்பட்டிருக்கக்கூடிய  ஒழுக்காற்று விடயங்கள் மீது அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட  தீர்மானங்களினால் மனக்குறையடைந்த உத்தியோகத்தர்களினால் சமர்ப்பிக்கப் பட்ட  அல்லது சமர்ப்பிக்கப்படவுள்ள மனுக்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள விசேட நிலைமைகளின் கீழ் அரசாங்க சேவை ஆணைக்குழுவானது கவனத்திற்கு எடுத்துக் கொள்வதை அரசியலமைப்பின் 55(11) ஆம் உறுப்புரையின் நியதிகளின் பிரகாரம் கொள்கை விடயமொன்றாகக் கருதுவதை பொருத்தமானதொன்றாகக் கருதி அதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கும்;


(I)    முறைமையான ஒழுக்காற்று விசாரணையின் போது அல்லது அமைச்சரவையினால் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது பரிசீலனை செய்யப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டிய விடயமொன்று அல்லது விடயங்கள் பற்றி அல்லது பரிசீலனை செய்யப்படாத விடய மொன்று அல்லது விடயங்கள் பற்றி பரிசீலனைச் செய்வதற்காக விடுக்கப்படும் மனுக்கள்;  

(II)    குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தீங்கு விளைவிக்கும் நடைமுறை வழுக்கள் நிகழ்ந்த முறைமையான ஒழுக்காற்று விசாரணையின்  தொடக்கத்திலிருந்து முறைமையான ஒழுக்காற்றுக் கட்டளை வழங்கப் படும்  வரையுள்ள காலப் பகுதியில்  நிகழ்ந்திருப் பதைச் சுட்டிக் காண்பிக்கும் மனுக்கள்;  

(III)    அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் சார்பில் ஒழுக்காற்று அதிகாரியின் பணிகளை நிறை வேற்றுவதில்  அமைச்சரவையினால் விதித்துரைக் கப்பட்ட கட்டளை இந்த ஆணைக் குழுவானது செயற்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இதைப்போன்ற தவறொன்றுக்கு இக்குழுவினால் முன்னர் வழங்கப்பட்ட கட்டளையின் / தண்டனையின் மட்டத்தை விஞ்சியிருப்பதை சுட்டிக் காண்பிக்கின்ற மனுக்கள்;  அத்துடன்

(ஆ)    அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினால் குறித்துரைக் கப்பட்ட காலப்பகுதியில் மேலே சொல்லப்பட்ட காரணங்களின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை அரசாங்க சேவைகள் ஆணைக்குழு பெற்றுக் கொள்வதற்கும் தனது தீர்மானத்தை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட காலக்கட்டமைப்பு ஒன்றுக்குள் இயைபுள்ள அதிகாரபீடத்திற்கும் மனுதாரருக்கும் அறிவிப்பதற்கும்.

அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவானது செயற்படாதிருந்த காலப் பகுதியினுள் அக்குழுவின் சார்பில் அமைச்சரவையினால் வெளியிடப்பட்ட ஒழுக்காற்றுக் கட்டளையொன்று பற்றி மனக்குறையடைந்த அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் முதலில் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கு மனுவொன்றைச் சமர்ப்பிப்பதற்கும் இந்த ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்குப் பின்னர் மனுதாரர் இன்னும் மனக் குறைவுடையவராக இருக்குமிடத்து அவர் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட கட்டளை அல்லது தீர்மானம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், நான்கு (04) வாரங்களுக்குள் நிருவாக  மேன்முறையீடுகள் நியாயசபைக்கு மனுவொன்றைச் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதும் மேற்குறிப்பிட்ட வேலைத்திட்டத்​தை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துக்குமாகும் எனவும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.