• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உழைப்பு சாத்தியப்பாடுகளை அதிகரிப்பதற்காக விவசாயிகளுக்கிடையில் நெல் உலரவைக்கும் தொழினுட்பத்தை மேம்படுத்துதல்
- - நெல் குற்றியதன் பின்னர் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தும் பொருட்டு ஈரப்பதனுடன் அறுவடை செய்யப்படும் நெல் உரிய முறையில் உலர வைக்கப்படல் வேண்டும். ஆயினும், உலர்வதற்கு காலம் எடுத்தல், முழுமையாக உலராது இருத்தல், அளவுகடந்த உலர்ந்திருத்தல் போன்ற காரணங்களினால் எதிர்பார்க்கப்படும் தரம் பேணப்படாமையினால், விவசாயிகளுக்கு நெற் தொகைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நேரிடுகின்றது. ஆதலால், வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவின் ஆலோசனைக்கு அமைவாக நியமிக்கப்பட்ட செயற்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டவாறு உலரவைக்கும் தொழினுட்பத்தை விவசாயி களுக்கிடையே பிரபல்யப்படுத்தும் முன்னோடிக் கருத்திட்ட மொன்றினை உயர் உற்பத்திக்கு உரிமை கோரும் வருடத்தில் இரண்டு தடவை நெற்செய்கையில் ஈடுபடும் பொலன்நறுவை மாவட்டத்தினுள் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, நாடு தழுவிய நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவு செய்யப்படும் பொலன்நறுவை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து விவசாய அமைப்புகளுக்கு வரியற்ற மூன்று மில்லியன் ரூபா பெறுமதிமிக்க இரண்டு மெற்றிக்தொன் கொள்ளளவு கொண்ட நடமாடும் உலர்த்தியொன்றையும் வரியற்ற ஆறு மில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த ஆறு மெற்றிக்தொன் கொள்ளளவைக் கொண்ட நிலையான உலர்த்தியொன்றையும் அரசாங்கத்தினால் ஏற்கப்படும் செலவினை மீள அறவிட்டுக் கொள்ளும் பொறிமுறையுடன் வழங்கும் பொருட்டு பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.