• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவு இலக்கம் 143: இலங்கை போக்குவரத்துச் சபைக்கு நவீன வசதிகளுடனும் இலகுவாக பயன்படுத்தும் தரங்களுடனும் கூடிய பேருந்துகளை பெற்றுக் கொள்ளல்
- - 2019 ஆண்டு வரவுசெலவுத்திட்டத்திலிருந்து குறித்தொதுக்கப்பட்ட 1,500 மில்லியன் ஒதுக்கீட்டை பயன்படுத்தி நவீன வசதிகளுடன்கூடிய, டீசல் வகையான, அடிப்பகுதி தாழ்வான வளிச்சீராக்கி கொண்ட, இலகுவாக பயன்படுத்தும் தரங்களுடனும் கூடிய பேருந்துகளை சாத்தியப்படும் எண்ணிக்கையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்காக கொள்வனவு செய்யும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.