• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வடமாகாண சிவில் வேலை ஒப்பந்தப் பொதிகள் ஐந்தினை வழங்குதல்
- - ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள கிராமிய வீதிகளின் 67.64 கிலோ மீ்ற்றர்களை புனர்நிர்மாணிப்பதற்கான / மேம்படுத்துவதற்கான மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்த பொதியை யப்பானின் World Kaihatsu Kogyo Company Ltd நிறுவனத்துடன் கூட்டுத்தொழில்முயற்சியிலுள்ள WKK Engineering Company (Pvt.) Ltd. நிறுவனத்திற்கும், அதே மாவட்டத்திலுள்ள கிராமிய வீதிகளின் 71.81 கிலோ மீ்ற்றர்களை புனர்நிர்மாணிப்பதற்கான / மேம்படுத்துவதற்கான மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்த பொதியை சீனாவின் China State Construction Engineering Corporation Ltd நிறுவனத்திற்கும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கிராமிய வீதிகளின் 60.31 கிலோ மீ்ற்றர்களை புனர்நிர்மாணிப்பதற்கான / மேம்படுத்துவதற்கான மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்த பொதியை Sri Ram Construction நிறுவனத்திற்கும், மன்னார் மாவட்டத்திலுள்ள கிராமிய வீதிகளின் 56.03 கிலோ மீ்ற்றர் மற்றும் 61.30 கிலோ மீ்ற்றர் ஆகியவற்றை புனர்நிர்மாணிப்பதற்கான / மேம்படுத்துவதற்கான மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்த பொதிகளை K.D.A. Weerasinghe & Company (Pvt.) Ltd. நிறுவனத்திற்கும் கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.