• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் இரண்டாம் நிலை நகர நிலைபேறுடைய அபிவிருத்தி கருத்திட்டம் - இலங்கையில் 25 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நகர உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்
- - அபிவிருத்தி முன்னெடுப்புகளுடன் இத்தீவின் பிரதான நகரங்களை மாதிரி நகரங்களாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன், 25 உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நகர உட்கட்டமைப்பின் விரிவான வடிவமைப்பு மற்றும் பெறுகை சேவைகள் சார்பிலான மதியுரைச் சேவைகளை இல.55-2/1, காலி வீதி, கொழும்பு 03 எனும் முகவரியிலுள்ள இந்தியாவின் Resources Development Consultants (Pvt) Limited நிறுவனம் (பிரதான மதியுரைஞர்கள்) மற்றும் IPE Global Limited நிறுவனம் (கூட்டு தொழில்முயற்சி பங்காளர்) என்பவற்றின் கூட்டு தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.