• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தொண்டர் சேவை தொடர்பிலான தேசியக் கொள்கை
- - வறுமை ஒழிப்பு, சிறுவர் பாதுகாப்பு, பெண்கள் வலுவூட்டம், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், சமுதாய சுகாதார செயற்பாடுகள், அங்கவீனமுற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் ஆதரவளித்தல், அனர்த்த நிலைமைகளில் நிவாரணம் வழங்குதல் மற்றும் சுற்றாடல் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் சமுக பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளை மேம்படுத்துவதில் தொண்டர் சேவையானது அளப்பரிய வகிபாகமொன்றை ஆற்றுகின்றது. ஆதலால், இலங்கையில் தொண்டர் சேவை தொடர்பிலான தேசியக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவது அவசரமான தேவைப்பாடொன்றாக மாறியுள்ளது. அதற்கிணங்க, சிவில் சமூகத்துடனும், கல்வியாளர்களுடனும், தொழில் நிபுணர்களுடனும், பொதுமக்களுடனும் மற்றும் உரிய அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அத்துடன் தனியார் துறை நிறுவனங்கள் என்பவற்றுடனும் உசாவுதலைச் செய்து வரையப்பட்ட உத்தேச தொண்டர் சேவை தொடர்பிலான தேசியக் கொள்கை சார்பிலும் அது குறித்து பொருத்தமான சட்டத்தினை வரைவதற்கும் ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு கொள்கையளவில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.