• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீரிகம பிரதேசத்தில் மும்மொழிக் கல்வியுடன் கூடிய புதிய கலவன் தேசிய பாடசாலையொன்றை தாபித்தல்
- - மீரிகம பிரதேசத்தில் மும்மொழிக் கல்வியுடன் கூடிய புதிய கலவன் தேசிய பாடசாலையொன்றை தாபிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2020 பெப்ரவரி மாதமளவில் இப்பாடசாலையின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் தரம் 6 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்கு இயலுமாகும் வகையிலும் அதன் நிர்மாண மற்றும் ஏனைய அபிவிருத்தி செயற்பாடுகளுக்குத் தேவைப்படும் அவசியமான நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.