• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இறால் வளர்ப்புக்காக ஒழுங்கு செய்யப்பட்ட பெரிய பண்ணைகளை சிறிய பிரிவுகளாக ஒதுக்குவதை இடை நிறுத்துதல்
- - இறால் வளர்ப்புக்காக ஒழுங்கு செய்யப்பட்ட பெரிய பண்ணைகளின் குத்தகைக்காலம் முடிவுறுவதைத் தொடர்ந்து அவற்றில் சிலவற்றை சிறிய பண்ணைகளாக தாபிக்கும் போக்கொன்று நிலவிவருகின்றது. இப்பண்ணைகளின் அடிப்படை விஞ்ஞான, சுகாதார முகாமைத்துவ தேவைப்பாடுகளை பேணுவதில் இதுவொரு தீவிர அச்சுறுத்தலாகும். இந்தப் போக்கினை தடுக்கும் நோக்குடன், புத்தளம் மாவட்டத்தில் தற்போது இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டுவரும் குத்தகை காலம் முடிவடைந்த பண்ணைகளை சிறிய பிரிவுகளாக பிரிப்பதை தடுப்பதற்கும் இறால் வளர்ப்பை கைவிட்டுள்ள பெரிய பண்ணைகளை அல்லது குத்தகை காலப்பகுதி முடிவுறுத்தியுள்ள பண்ணைகளை சிறிய பண்ணைகளாகப் பிரிக்கும் போது ஒவ்வொரு பண்ணையாளரும் குறைந்தது 4 ஏக்கர் காணியையேனும் கொண்டிருக்குமாறு குறித்தொதுக்குவதற்கும் அத்துடன் அக்காணிகளில் நீர்தடாகங்களை நிர்மாணிக்கும்போது நீருயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் சிபாரிசினை பெற்றுக் கொள்வது கட்டாயமென்பதை தெரிவிக்கும் நிபந்தனையொன்றை உள்ளடக்குவதற்கும் அத்துடன் இறால் வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் பெரிய பண்ணைகளை நீருயிரின வளர்ப்பைவிட வேறு எவையேனும் செயற்பாடுகளுக்கு பயன்படுத் தாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.