• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் துணைக் கருக்கட்டல் சிகிச்சை நிலையமொன்றைத் தாபித்தல்
- - கருவள ஆற்றலற்ற தம்பதியினருக்கு அதன் சேவைகளை விரிவாக்கும் பொருட்டு புறம்பான புதிய இருமாடிக் கட்டடமொன்றில் சோதனைக்குழாய் (In-Vitro) கருக்கட்டல் வசதிகளுடன் கூடிய ஆய்வுகூடமொன்றையும் சிகிச்சைகூடமொன்றையும் உள்ளடக்கி துணைக் கருக்கட்டல் சிகிச்சை நிலையமொன்றைத் தாபிக்கும் பொருட்டும் அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.