• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- - வரி அல்லது தீர்வை செலுத்தப்படாத மதுபானங்களின் பாவனையை தடுப்பதையும் மற்றும் போலி பொருட்களை தடுக்கும் அதேவேளை தீர்வை வருமானத்தின் பாதுகாப்பை முன்னேற்றுவதையும் இலக்காக கொண்டு, 2016 ஆம் 2017 ஆம் ஆண்டுகளின் வரவுசெலவுத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டவாறு நம்பகரமான ஸ்ரிக்கர் (Sticker) மற்றும் ஸ்ரிக்கர் முகாமைத்துவ முறையினை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை நிதி அமைச்சு எடுத்துள்ளது. அதற்கிணங்க, 2019 06 20 ஆம் திகதியிடப்பட்டதும் 2128/30 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட 04/2019 ஆம் இலக்கத்தைக் கொண்ட மதுவரி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.