• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யால பலட்டுபான சுற்றுலா வலயத்திலுள்ள காணியினை M/s. One Nature Limited கம்பனியின் சகோதர கம்பனிக்கு குறித்தொதுக்குதல்
- - முழுமையாக வசதியளிக்கப்பட்ட 28 நகர்ப்புற மாளிகைகளை உள்ளடக்கிய சுற்றுலா பொழுதுபோக்கு மையமொன்றை அபிவிருத்தி செய்வதற்காக விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்ட பெறுமதிக்கு அமைவாக, முற்பணக் கொடுப்பனவு மற்றும் வருடாந்த குத்தகை என்பவற்றுக்கு உட்பட்டு ஐம்பது வருட குத்தகைக்கு யால பலட்டுபான சுற்றுலா வலயத்திலுள்ள ஏழு ஏக்கர் விஸ்தீரணம்கொண்ட காணியொன்றை M/s. One Nature Limited கம்பனியின் சகோதர கம்பனிக்கு குறித்தொதுக்கும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.