• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சுற்றாடல் தொழில்சார்பாளர்களினது நிறுவனத்தை தாபித்தல்
- இலங்கை சுற்றாடல் தொழில்சார்பாளர்களினது நிறுவனத்தை கூட்டிணைக்கும் பொருட்டு 2016 பெப்ரவரி 19 ஆம் திகதியன்று பாராளுமன்ற உறுப்பினரான திரு.ஹர்ஷன ராஜகருணா தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலம் ஒன்று தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடும் நடைமுறைக்கு இணங்க, அது குறித்து சட்டமா அதிபரின் சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சட்டவரைநர் வரைவினைத் திருத்தியுள்ளார். ஆதலால், கூறப்பட்ட நிறுவனத்தினை தாபிப்பதன் ஊடாக உள்நாட்டு ரீதியிலும் சருவதேச ரீதியிலும் தொழில்வாண்மை அடையாளத்தை சுற்றாடல் விஞ்ஞானிகளும் தொழில்சார்பாளர்களும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாட்டை இது உருவாக்குவதனால் நியமங்கள் மற்றும் ஒழுக்க விதிக் கோவையுடன் அவர்களுக்கு உலகளாவிய சூழமைவுக்குள் சமூக மற்றும் தொழில்வாண்மை அடையாளமொன்றை வழங்குவதற்கு அந்நிறுவனத்தை கூட்டிணைக்கும் பொருட்டு வரைவு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.