• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் உடன்படிக்கைக்கு அமைவாக 2030 ஆம் ஆண்டளவில் வலுசக்தி துறைக்குரிய பசுமை வீட்டு வாயு வௌியேற்றத்தைக் குறைத்தல்
- - 2015 ஆம் ஆண்டில் பாரீசில் நடாத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு சமவாயத்தின் பங்காளர்களின் 21 ஆவது மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பாரீஸ் உடன்படிக்கையில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது அதற்கிணங்க, 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2030 ஆம் ஆண்டில் 20 சதவீதத்தினால் பசுமை வீட்டு வாயு வௌியேற்றத்தைக் குறைப்பதற்கு இலங்கை கடப்பாடுடையது. இதனை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சுற்றாடல் பாதுகாப்பு, பொது சுகாதார பாதுகாப்பு மற்றும் பசுமை வீட்டு வாயு வௌியேற்றம் என்பவற்றின் மீது விசேட கவனத்தை செலுத்தும் முக்கியத்துவம் தொடர்பிலும், அத்துடன் புதுப்பிக்க முடியாத வலுசக்தி மூலங்களை பயன்படுத்தும் மின் நிலையங்களை 2020 ஆம் ஆண்டிலிருந்து 2030 ஆம் ஆண்டுவரையான தசாப்த காலப்பகுதியில் நிர்மாணிக்கும் பட்சத்தில், தேசிய சுற்றாடல் சட்டங்களை பின்பற்றுவதன் மூலம் நடாத்தப்படும் விஞ்ஞான சுற்றாடல் மதிப்பீடுகளின் ஊடாக வழங்கப்படும் அவதானிப்புரைகள் மற்றும் சிபாரிசுகள் என்பவற்றை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு கரிசனையில் எடுக்கப்படும் விடயத்துடன் தொடர்புபட்ட தீர்மானங்களை எடுப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.