• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'இலங்கை சுற்றுலாத்துறையின் அடையாளத்திற்கு' புத்துயிரளித்து அதனை மீளக் கட்டியெழுப்புவதற்காக குறுங்கால பொதுசனத் தொடர்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படை குறிக்கோள்களை எய்தும் பொருட்டு 'இலங்கை சுற்றுலாத்துறையின் அடையாளத்திற்கு' புத்துயிரளித்து அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கும் நெருக்கடி நிலைமையை முகாமை செய்வதற்குமாக குறுங்கால பொதுசனத் தொடர்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்காக பெறுகை வழிகாட்டலுக்கு புறம்பாக M/s. J. Walter Thompson (Pvt.) Ltd., நிறுவனத்தை தெரிவு செய்தமை சார்பில் தழுவு அங்கீகாரம் வழங்கும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.