• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகாரசபைக்கும் பால்மா இறக்குமதியாளர் களுக்கும் இடையிலான உடன்படிக்கை
- பால்மா இறக்குமதியாளர்களுக்கும் நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகாரசபைக்கும் இடையில் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கு அமைவாக நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகாரசபையினால் சமர்ப்பிக்கப்பட்ட வழிமுறைக்கு அமைவாக இதன் பின்னர் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் உச்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்படுமென வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவின் தலைவராக கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.