• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெத்தூவ பிரதேசத்தில் கூட்டு சுற்றுலா அபிவிருத்தி கருத்திட்டமொன்றை அபிவிருத்தி செய்தல்
- அரசாங்க மற்றும் தனியார் பங்குடமையின் மூலம் சுற்றுலா இடமொன்றாக தெத்தூவ பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச அபிவிருத்தி கருத்திட்டத்தின் பாரிய அளவினை கருத்தில் எடுத்துக் கொண்டு பாரிய கருத்திட்டங்களுக்கான விருப்பு வௌிப்படுத்தல் ஆவணங்களை தயாரிப்பது சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் மதியுரைச் சேவைகளை அனுபவம் மிக்க உள்நாட்டு அல்லது சர்வதேச மதியுரை நிறுவனமொன்றின் சேவையினை பெற்றுக் கொள்வதற்கும் இந்த கருத்திட்டம் சம்பந்தமாக அக்கறையுள்ள தரப்பினர்களிடமிருந்து விருப்பு வௌிப்படுத்தல்கள் உட்பட வர்த்தக பிரேரிப்புகளை அழைக்கும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சரினாலும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரினாலும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.